பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உருவாக காரணம் என்ன?; இந்திய அறிவியல் கழகம் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உருவாக காரணம் என்ன? என்பது குறித்து இந்திய அறிவியல் கழகம் நடத்திய ஆய்வின் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2023-06-07 21:27 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உருவாக காரணம் என்ன? என்பது குறித்து இந்திய அறிவியல் கழகம் நடத்திய ஆய்வின் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏரியில் வெள்ளை நுரை

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த ஏரியில் அடிக்கடி வெள்ளை நுரை உருவாகி ஏரி அருகே இருக்கும் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீதும், வீடுகள் மீது விழுந்த வண்ணம் இருக்கிறது.

ஏரியில் கழிவுநீர் மற்றும் ரசாயனம் கலப்பதால் தான் இந்த வெள்ளை நுரை உருவாகுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, பெல்லந்தூர் ஏரியை பாதுகாக்கவும், அங்கு கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

நிபுணர்கள் ஆய்வு

இந்த நிலையில், பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உருவாக காரணம் என்ன? என்பது குறித்து இந்திய அறிவியல் கழகம் ஒரு ஆய்வு நடத்தியது. அதாவது ஏரியின் ஒவ்வொரு பகுதிகளில் இருந்து தண்ணீரை எடுத்து, ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து, இந்திய அறிவியல் கழகம் பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உருவாவதற்கான காரணம் குறித்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, 3 முக்கிய காரணங்களாக ஏரியில் கலக்கப்படும் கழிவுநீர் முதன்மையானதாகும். இதற்கு அடுத்தபடியாக மழை அதிக அளவு பெய்யும் போது ஏரிக்கு வரும் கழிவுகள் காரணமாக அதிக அளவு நுரை உருவாகி 25 அடி உயரம் வரை எழுகிறது. ஏரியில் தண்ணீரில் சேரும் பாக்டீரியாக்களும் (கிருமிகள்) மற்றொரு காரணம் என்று இந்திய அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.

ரசாயனம் கலப்பு

இதுகுறித்து இந்திய அறிவியல் கழகத்தின் விஞ்ஞானி எச்.என்.ஜாணக்யா கூறுகையில், பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உருவாக கழிவு நீர் கலப்பது, ரசாயனம் கலப்பது உள்ளிட்டவை முக்கிய காரணமாகும். நுரை உருவாகாமல் தடுக்க மழை காலத்திற்கு முன்பாக ஏரியை சுத்தம் செய்ய வேண்டும். கழிவுநீா், ரசாயனம் ஏரி தண்ணீருக்குள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமாகும்', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்