கோடை வெயில் அதிகாிப்பு... டெல்லியில் பீா் தட்டுப்பாடு...

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் டெல்லியில் பீா் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனால் பீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-05-25 18:28 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசு பிற மாநிலங்களில் இருந்து பீா்களை இறக்குமதி செய்து வருகிறது. டெல்லியில் வழக்கத்தைவிட கோடை வெயில் அதிகமாக இருப்பதால், பிற மாநில விற்பனையாளர்கள் பல கட்டுப்பாடுகள் விதிப்பதன் காரணமாக பீா் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் டெல்லியில் உள்ள பீர் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

டெல்லி அரசு கடந்த நவம்பா் மாதத்தில் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. இதன்காரணமாக தனியாா் விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளா்களுக்கு கவா்ச்சிகரமான சலுகைகளை அளித்து வருகின்றன. இதன் காரணமாக பீர் உட்பட அனைத்து வகையான மதுபானங்களின் தேவையை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மதுபான நிறுவனங்களின் இயக்குநர் ஜெனரல் வினோத் கிரி கூறுகையில், டெல்லியில் பீா் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கோடை காலம் ஆரம்பித்ததாகும். ராஜஸ்தான், அரியானா மற்றும் பஞ்சாப் போன்ற அண்டை மாநிலங்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்த பிறகு டெல்லிக்கு வழங்குவதும் ஒரு காரணமாகும் என்று அவர் கூறினார்.

வழக்கமாக, டெல்லியில் ஆண்டுக்கு 315-320 மில்லியன் பீர் விற்பனையாகும். அதில் 40 சதவீதம் கோடை காலத்தில் விற்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 330-340 மில்லியன் பீா் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்