மழைக்கு வீடு இடிந்ததால் விவசாயி தற்கொலை
மழைக்கு வீடு இடிந்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டனர்.;
தார்வார்: கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா சுள்ளா கிராமத்தை சேர்ந்தவர் சண்முகப்பா சிவப்பா கவுரி(வயது 58). விவசாயியான இவரது வீடு தொடர்ந்து பெய்த கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சண்முகப்பா மனமுடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கும் நேரத்தில் சண்முகப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த உப்பள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.