பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு மாணவி ஓட்டம்

பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு மாணவி ஓட்டம் பிடித்தார்.

Update: 2022-10-19 18:45 GMT

பெங்களூரு: நந்தினி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 15 வயதில் மகள் இருக்கிறாள். அந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த மாணவி சரியாக படிக்காததால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி மாணவி வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். அந்த மாணவி பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவியை மீட்க நந்தினி லே-அவுட் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மங்களூருவுக்கு சென்று மாணவியை தேடிவருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்