காதல் தோல்வியால் தூக்குப்போட்டு பீகார் வாலிபர் தற்கொலை

சாகரில், காதல் தோல்வியால் தூக்குப்போட்டு பீகார் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-20 15:28 GMT

சிவமொக்கா;


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பக்திகுமார்(வயது 20). இவர், சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா குட்டேஆலஹள்ளி கிராமத்தில் அறை எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பக்திகுமார் தங்கி இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் அப்பகுதியினர், அறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அறையில் பக்திகுமார், தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்த தகவலின் பேரில் சாகர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

விசாரணையில், பக்திகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பக்திகுமாரின் உடலை, போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பக்திகுமார் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில், காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்