பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் தாயிடம் இருந்து பிரிந்த 11 சிறுத்தை குட்டிகள் பராமரிப்பு

பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் தாயிடம் இருந்து பிரிந்த 11 சிறுத்தை குட்டிகள் பராமரிக்கப்படுகிறது.;

Update: 2023-05-18 20:57 GMT

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் பன்னரகட்டா உயிரியல் பூங்கா உள்ளது. அந்த பூங்காவுக்கு தற்போது புதிய வரவாக 11 சிறுத்தை குட்டிகள் வந்துள்ளது. அதாவது பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் தாயிடம் இருந்து பிரிந்திருந்த 11 சிறுத்தை குட்டிகளும் பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பராமரிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த 11 சிறுத்தை குட்டிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்து ஊழியர்கள், தொழிலாளர்கள் பராமரித்து வருகின்றனர். அந்த 11 சிறுத்தை குட்டிகளும் பிறந்திருந்த சில நாட்களிலேயே தாயிடம் இருந்து பிரிந்திருந்தது.


இதன் காரணமாக அந்த சிறுத்தை குட்டிகளுக்கு புட்டி பால் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஆட்டுப்பால் மற்றும் ஊட்டசத்து மிகுந்த உணவுகளே சிறுத்தை குட்டிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பிறந்த சில நாட்களிலேயே பிரிந்திருந்ததால் சரியான வளர்ச்சி இல்லாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் பராமரிப்பதுடன், தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு ஆண்டு கழித்த பின்பு பன்னரகட்டா பூங்காவில் புதிதாக அமைக்கப்பட உள்ள சிறுத்தை சபாரியில் 11 சிறுத்தை குட்டிகளும் விடப்படும். தற்போது 11 சிறுத்தை குட்டிகளையும் பச்சிளம் குழந்தை போல பராமரித்து வருவதாக உயிரியல் பூங்கா அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்