அடுத்த மாதம் இந்தியா வருகிறார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார்.;
புதுடெல்லி,
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாள் சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வருகிறார். அவர் 5-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
5-ந்தேதி அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், எல்லை பிரச்சினை ராணுவம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். மேலும் இந்த பயணத்தின் போது இந்திய தலைவர்கள் பலரையும் ஷேக் ஹசினா சந்திக்க உள்ளார்.