எலெகட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தடை?

எலெகட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தடை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-11-28 21:08 GMT

எலெக்ட்ரானிக் சிட்டி-

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் எலிவேட்டர் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் உயிர் இழந்து வருகிறார்கள். அந்த மேம்பாலத்தில் வாகனங்கள் அதிவேகமாக செல்வது வழக்கம். கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக மற்ற வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுவதாகவும், அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்களும் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு விபத்து நடக்கும் போது மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து பலியாகி வருகிறார்கள். இதனால் எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி மேம்பாலத்தை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்