இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை

வளர்ப்பு நாய்களின் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Update: 2024-03-14 02:55 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 23 வகையான மூர்க்கமான நாய்களை வளர்க்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

வளர்ப்பு நாய்களின் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், ராட்வீலர், மாஸ்டிப், தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய், டோர்ன்ஜாக், சர்ப்லானினாக், ஜப்பானிய தோசா மற்றும் அகிதா, மாஸ்டிப்ஸ், டெரியர்கள், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஓநாய் நாய்கள், கனாரியோ, அக்பாஷ் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ உள்ளிட்ட 23 வகையான மூர்க்கமான நாய்களை விற்பனை செய்வதற்கும், செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.ஏற்கனவே செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட இந்த இன நாய்களை மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க கருத்தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட நாய் இனங்களை விற்பனை செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் அல்லது அனுமதி வழங்க வேண்டாம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்