சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதாக புகார்அமித்ஷா, யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் மனு

காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் குழு நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை சந்தித்தது. அவர்களிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தது.

Update: 2023-04-28 23:15 GMT

புதுடெல்லி, 

காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் குழு நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை சந்தித்தது. அவர்களிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தது.

அபிஷேக் சிங்வி, பவன்குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் அக்குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

மனுவில், கர்நாடக தேர்தலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரம் செய்தபோது, தேர்தல் ஆதாயம் பெறுவதற்காக சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாகவும், அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னர், அபிஷேக் சிங்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள், ஆட்சேபகரமான, பாரபட்சமான, மதவாத கருத்துகளை பேசி உள்ளனர். அதுபற்றி புகார் செய்துள்ளோம்.

அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அவர்கள் பிரசாரம் செய்ய தடை விதிக்குமாறு கேட்டுள்ளோம்.

சோனியாகாந்தியை 'விஷக்கன்னி' என்று பா.ஜனதா பிரமுகர் ஒருவர் கூறியது தொடர்பாக, அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்