'பி' பாரம் வாங்க சைக்கிளில் பயணம் செய்த சுதந்திர போராட்ட தியாகி

‘பி’ பாரம் வாங்க சைக்கிளில் சுதந்திர போராட்ட தியாகி பயணம் செய்துள்ளார்.

Update: 2023-04-11 18:45 GMT

பெங்களூரு- 

தற்போதைய அரசியல் கட்சிகளில் உள்ள தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தாங்கள் சார்ந்த கட்சி தலைமை அலுவலகத்துக்கு சொகுசு கார்களில் வந்து இறங்குகிறார்கள். முன்காலத்தில் அப்படி எந்த சூழலும் இல்லை. சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 'பி' பாரம் வாங்க சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 1967-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது பெலகாவி மாவட்டம் கித்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்படி சுதந்திர போராட்ட தியாகி பி.எம்.சோனிகொப்பாவுக்கு, பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தந்தி அனுப்பியது. இந்த தந்தியை பெற்றுக்கொண்ட பி.எம்.சோனிகொப்பா, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நோக்கத்தில் கட்சியில் இருந்து 'பி' பாரம் வாங்க முடிவு செய்தார்.

அதன்படி, பி.எம்.சோனிகொப்பா தனது சொந்த கிராமமான இட்டகியில் இருந்து சைக்கிளில் பயணம் செய்து பெலகாவி காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று அவருக்கான 'பி' பாரம் வாங்கினார். இந்த தேர்தலில் 31 ஆயிரத்து 281 வாக்குகள் பெற்ற பி.எம்.சோனிகொப்பா கித்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வானார். அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட பி.எஸ்.எரசர்மா வெறும் 4,357 வாக்குகள் மட்டுமே பெற்று 2-வது இடத்தை பிடித்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்