காஷ்மீர் சோனாமார்க் பகுதியில் பனிச்சரிவு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள சோனாமார்க் பகுதியில் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை அருகே இன்று பெரிய அளவிலான பனிச்சரிவு ஏற்பட்டது. சோனாமார்க்கில் உள்ள சோஜிலா சுரங்கப்பாதை கட்டுமானப் பணிமனைக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவின் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் கடும் பனிப்பொழி ஏற்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கின் உயரமான பகுதிகளுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.