பயணியிடம் பணம், செல்போன் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
உப்பள்ளி அருகே பயணியிடம் பணம், செல்போன் பறித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹரி மோகன் என்பவர் ஆட்டோவுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், ஹரிமோகனிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம், நகையை தரும்படி கூறினார்.
அதற்கு ஹரிமோகன் மறுப்பு தெரிவித்ததால், ஆட்டோ டிரைவர் அவரை தாக்கி ரூ.15 ஆயிரம் ரொக்கம், விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து ஹரிமோகன், உப்பள்ளி புறநகர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிமோகனிடம் செல்போன், பணத்தை பறித்தவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், கங்காதர்நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் (வயது 40) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.