ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயற்சி; 5 பேர் கைது- அசாமை சேர்ந்தவர்கள்

ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயற்சி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-03 18:45 GMT

பெங்களூரு: பெங்களூரு ஜிகனி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீராம்புரம் பகுதியில் வங்கி அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்திற்கு கடந்த மாதம் 22-ந் தேதி மர்மநபர்கள் ஆட்டோவில் வந்தனர். பின்னர் அவர்கள் ஏ.டி.எம்.மிற்குள் புகுந்தனர். மேலும் அவர்கள் கியாஸ் கட்டர் போன்றவற்றை பயன்படுத்தி ஏ.டி.எம். மிஷினை உடைக்க முயன்றனர். அப்போது அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால், அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு, கியாஸ் கட்டர் உள்ளிட்ட பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஜிகனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த பபுல் நானியா, ஆசிப் உதின், தபாஸ் பிஸ்வாஸ், தில்வார் உசைன் லஷ்கர், ருகுல் அமின் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அத்திபெலேவுக்கு கூலி வேலைக்காக வந்ததும் தெரியவந்தது. இவர்கள் குறுகிய காலத்தில் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற ஆசையில் யூ-டியுப் வீடியோ பார்த்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்