பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருட்கள் கொடுக்க முயற்சி; 3 பேர் கைது
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருட்கள் கொடுக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
பெங்களூரு:
பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா உள்ளது. இந்த சிறையில் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளுக்கு அவர்களை பார்க்க வருபவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டு வருகிறார். இதனால் கைதிகளை பார்க்க வருபவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 2 கைதிகளை பார்க்க அவரது உறவினர்களான ஜே.சி.நகரில் வசித்து வரும் பிரசாந்த் (வயது 23), உமாசங்கர் (23), ருத்ரேஷ் (23) ஆகியோர் வந்தனர்.
அவர்களிடம் சோதனை நடத்திய போது 90 கிராம் போதைப்பொருட்கள் சிக்கியது. அந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்த சிறை அதிகாரிகள் 3 பேரையும் பரப்பன அக்ரஹாரா போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.