ஆற்று மணலை கடத்தி விற்க முயற்சிமர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
ஆற்று மணலை கடத்தி விற்க முயன்ற மர்ம நபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட முஞ்சுரு, செல்லியார் கிராமத்தில் ஆற்று மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சூரத்கல் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று அந்தப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது முஞ்சுர், செல்லியார் இருந்த ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. ஆனால் யார் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. லாரிகள் எதுவும் இல்லை. மணல் மட்டும் ஆற்றங்கரையோரம் இருந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ரூ.35 லட்சம் மதிப்பிலான ஆற்று மணல்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த ஆற்று மணலை யார் பதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆற்றில் இருந்து லாரி மூலம் கடத்தி வந்து, பதுக்கி வைத்து அதை, இரவு நேரங்களில் விற்பனை ெசய்து வந்ததாக தெரியவந்தது. ஆனால் கடத்தலில் யார் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. இந்த மணலை பறிமுதல் செய்த சூரத்கல் போலீசார், கடத்தலில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.