மேற்குவங்காளத்தில் லட்சுமி பூஜை கொண்டாடியவர்கள் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் லக்‌ஷ்மி பூஜை கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.;

Update: 2022-10-10 04:14 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவின் புறநகர் பகுதியான மொமின்பூரில் லட்சுமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், லட்சுமி பூஜையில் பங்கேற்றவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் ஏராளாமன மக்கள் காஇந்த சம்பவத்தை அம்மாநில பாஜக சுகந்த மஜும்தர் வீடியோ எடுத்து வெளியிட்டு, இந்த தாக்குதலை காவல்துறை தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, மொமின்பூர் வன்முறையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காத‌தால், உடன‌டியாக மத்திய பாதுகாப்புப் படையை அனுப்புமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சுகந்த மஜும்தர் கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் லக்‌ஷ்மி பூஜை கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்