சிவமொக்காவில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப்பதிவு

சிவமொக்காவில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2022-06-04 14:45 GMT

சிவமொக்கா;

சாலை பணிகள் ஆய்வு

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா முளுபாகிலுவை அடுத்த சித்தேஸ்வரா பகுதியில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதனை கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சச்சின் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

இது குறித்து சச்சின் தீர்த்தஹள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசா் இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-


தாக்குதலுக்கு கண்டனம்


சித்தேஸ்வரா கிராமத்தில் ரூ.95 ஆயிரம் செலவில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சச்சின் ஆய்வு செய்வதற்காக வந்தார். அப்போது இலியாஷ், பைரோஜ், பைஷல், சமத் ஆகியோர் சேர்ந்து சச்சினை தாக்கியுள்ளனர்.


இது மிகவும் கண்டிக்க தக்கது. இந்த தாக்குதல் குறித்து உள்துறை மத்திரி அரகஞானேந்திராவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்