ரெயில் நிலையத்தில் தவறி விழுந்து பெண் சாவு

ரெயில் நிலையத்தில் தவறி விழுந்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-10-08 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை மேற்கு வங்காளம் நோக்கி ஒரு ரெரயல் புறப்பட்டது. அந்த ரெயிலில் பயணித்த ெபண் ஒருவர், நடைமேடையில் இருந்த கடையில் பொருள் வாங்குவதற்காக ரெயிலில் இருந்து இறங்கினார். அவர் உணவை வாங்குவதற்குள் ரெயில் புறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உணவை வாங்கிவிட்டு வேகமாக ஓடிவந்து ரெயிலை பிடிக்க முயன்றார். அந்த சமயத்தில், தடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இதுகுறித்து பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பீகாரை சேர்ந்த ஷீத்தல் (வயது 31) என்பது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்