பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.14¾ லட்சம் கையாடல் செய்ததுடன் மேலாளர் மீது தாக்குதல்

சிவமொக்கா டவுனில், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.14¾ லட்சம் கையாடல் செய்ததுடன் மேலாளரை தாக்கிய சம்பவத்தில் முன்னாள் பெண் மேலாளர், அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-17 19:00 GMT

சிவமொக்கா;


ரூ.14.89 லட்சம் கையாடல்

சிவமொக்கா டவுன் ஒளேஒன்னூர் சாலை புரலே பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் வரை மீனாட்சி என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு பிறகு தற்போது வாசுதேவா என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே முன்னாள் மேலாளராக இருந்த மீனாட்சி, பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சொந்தமான ரூ.14.89 லட்சத்தை கையாடல் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த வாசுதேவா, மீனாட்சியிடம் பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் மீனாட்சி பணத்தை தருவதாக இழுத்தடித்து வந்துள்ளார். ஆனாலும் வாசுதேவா, மீனாட்சியிடம் பணத்தை திருப்பி தரும்படி ெதாடர்ந்து கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு

இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி, தனது கணவர் மோகன் குமார், மகன் ஹரி ஆகியோரை வைத்து வாசுதேவாவை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வாசுதேவா, வினோபா நகர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் பெட்ரோல் விற்பனை நிலைய முன்னாள் மேலாளர் மீனாட்சி, அவரது கணவர், மகன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்