மண்டியாவில் பி.யூ.கல்லூரியில் துணை இயக்குனர் பதவிக்கு 2 பேர் நியமனம்

மண்டியாவில் பி.யூ.கல்லூரியில் துணை இயக்குனர் பதவிக்கு 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் யார் பணியாற்றவேண்டும் என்று குழப்பம் நீடித்து வருகிறது.;

Update: 2022-09-22 18:45 GMT

மண்டியா:

மண்டியா மாவட்டத்தில் இயங்கி வரும் பி.யூ. கல்லூரி துணை இயக்குனராக உமேஷ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி உமேசை மாவட்ட பி.யூ. கல்வித்துறை பணியிடமாற்றம் செய்தது. அதன்படி கொப்பலில் உள்ள பி.யூ. கல்லூரியில் துணை இயக்குனராக பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேபோல் அதே பி.யூ. கல்லூரி துணை இயக்குனர் பதவிக்கு மஞ்சுநாத் என்பவரும் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 6-ந் தேதி மஞ்சுநாத் புதிய பணியிடத்தில் பொறுப்பு வகிப்பதற்கு சென்றார். அப்போது அங்கு உமேஷ் பணியில் இருந்தார். இதை பார்த்த மஞ்சுநாத் தனக்கான இடத்தை வழக்கும்படி கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஒரே பணியிடத்திற்கு யார் பணியாற்ற வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்