நிமிஷாம்பா கோவிலில் ஆன்லைன் மூலம் காணிக்கை

நிமிஷாம்பா கோவிலில் ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்தலாம்.

Update: 2022-08-16 21:39 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் நிமிஷாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. இந்த நிலையில் இக்கோவிலில் பக்தர்கள் உண்டியல்களில் அல்லாமல் ஆரத்தி தட்டில் போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுத்துச் சென்று விடுவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து கோவில் நிர்வாகம், பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக நேரடியாக கோவிலின் வங்கி கணக்கில் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கோவிலில் முக்கிய இடங்களில் கோவிலுக்கு சொந்தமான வங்கி கணக்கின் கியூ.ஆர். கோர்டு வைத்துள்ளனர். காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் உண்டியலில் பணம் போடலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்