நாடு முழுவதும் 4,001 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு ரூ.54,545 கோடி

நாடு முழுவதும் பதவியில் இருக்கும் 4,001 எம்.எல்.ஏ.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54,545 கோடியாகும்.;

Update: 2023-08-01 17:42 GMT

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களை அடிப்படையாக கொண்டு தயார் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

4,033 சட்டமன்ற உறுப்பினர்களில், 4,001 பேரின் பிரமாண பத்திரம் ஆய்வு செய்யப்பட்டது. பதவியில் இருக்கும் இந்த 4,001 எம்.எல்.ஏ.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54,545 கோடியாகும். இது நாகாலாந்து, மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் 2023-24-ம் ஆண்டுக்கான வருடாந்திர பட்ஜெட்டை விட அதிகமாகும். ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடியாக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்