இமாச்சல பிரதேசத்தில் நவ.12-ல் சட்டசபை தேர்தல்...!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;

Update: 2022-10-14 10:15 GMT

புதுடெல்லி,

 இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.  தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

* இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

*  நவம்பர் 12-பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

*  அக்டோபர் 17-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.25-ம் தேதி

*  மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ல் வாக்குப்பதிவு நடக்கிறது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்