இமாசல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு

68 தொகுதிகளை ெகாண்ட இமாசல பிரதேச சட்டசபைக்கு நாளை (சனிக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

Update: 2022-11-10 23:45 GMT

சிம்லா, 

68 தொகுதிகளை ெகாண்ட இமாசல பிரதேச சட்டசபைக்கு நாளை (சனிக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் களை கட்டியிருந்தது.

ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டனர். பிரதமர் மோடி, ேஜ.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகள் என பா.ஜனதாவின் முன்னணி தலைவர்கள் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆளுங்கட்சிக்கான களத்தை வலுப்படுத்தினர்.

இதைப்போல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் மாநிலத்தில் உச்சகட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர்.

இதைப்ேபால இரு கட்சிகளின் சார்பில் சமூக வலைத்தளங்களிலும் ேதர்தல் பிரசாரம் களைகட்டியிருந்தது. இரு கட்சிகளின் ஐ.டி. பிரிவுகளின் சார்பில் இந்த பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு கடந்த சில வாரங்களாக அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அங்கு நாளை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்