மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம்
மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் ஒசகோட்டை தாலுகா சிக்ககொலிகா கிராமத்தில் தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஈசுவரப்பா பூஜாரி என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அவர், பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக படிக்கவில்லை என கூறி, அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து மாணவன் தனது பெற்றோரிடம் கூறினான். இதையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி கல்வி துறை அதிகாரி, ஈசுவரப்பாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அதற்கு மாற்றாக வேறு ஆசிரியரை கொண்டு, வகுப்புகளை நடத்துவதற்கு உத்தரவிட்டார்.