அசாமில் இதுவரை அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 34க்கும் மேற்பட்டோர் கைது!
அசாம் மாநிலத்தில் அல்கொய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் கோல்பாரா மாவட்டத்தில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய 34க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அல்கொய்தா போன்ற பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அசாம் மாநில போலீஸ் டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா கூறுகையில்:-
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய 34க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சதிகளை வெற்றி பெற அசாம் காவல்துறை அனுமதிக்காது. சில இராணுவப் பயிற்சி முகாம்கள் வங்காளதேச நாட்டவர்களால் அமைக்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் சில புதிய குழுக்கள் உருவாகி இளைஞர்களை சாதகமாக பயன்படுத்தி தீவிரவாதத்தை பரப்பி வருகின்றன. அசாமில் பல்வேறு வகையான மதரஸாக் குழுக்கள் உள்ளன. சில புதிய குழுக்கள் முளைத்து சாதகமாக்கிக் கொள்கின்றன.
அசாமுக்கு வெளியில் இருந்து குறிப்பாக, வங்காளதேசம் மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களில் இருந்து சதித்திட்டம் தீட்டப்படுகிறது.அவர்கள் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு இளைஞர்களை சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.