அசாமில் ராணுவ ரோந்து வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு உல்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான உல்பா, ராணுவ வாகனங்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் நேற்று காலை ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தகவலின்படி, நேற்று காலை பயங்கரவாதிகள் பெங்கேரி-திக்பாய் சாலையில் (வனஞ்சல்) ராணுவ வாகனங்களை தாக்குதல் நடத்தினர்.
ராணுவ அதிகாரிகள் அளித்த தகவலின்படி, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, ராணுவ வீரர்களும் பதிலடித் தாக்குதல் நடத்தினர், அதன் பிறகு பயங்கரவாதிகள் சுற்றியுள்ள காடுகளில் பதுங்கியிருந்தனர். இருப்பினும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்துள்ளது. தேடுதல் பணி இன்னும் தொடர்கிறது. இந்த என்கவுன்டரில் உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாமில் குறிப்பாக டின்சுகியா மாவட்டத்தில் உல்பா என்ற தீவிரவாத அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான உல்பா, ராணுவ ரோந்து வாகனங்கள் மீது திங்கள்கிழமை நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதற்கான பொறுப்பு ஏற்பதாக இன்று மின்னஞ்சல் மூலம் அந்த அமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.