லவ் ஜிகாத்திற்கு எதிராக நாட்டில் கடுமையான சட்டம் அவசியம்- அசாம் முதல் மந்திரி வலியுறுத்தல்

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்;

Update: 2022-11-22 14:28 GMT

கட்ச்,

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனசுரா மற்றும் கட்ச் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது, லவ் ஜிகாத்திற்கு எதிராக நாட்டில் கடுமையான சட்டம் அவசியம் என்று அசாம் முதல் மந்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இதனால்தான் லவ் ஜிகாத்க்கு எதிராக நாட்டிற்கு கடுமையான சட்டம் தேவை. மீண்டும் இது போன்ற சம்பங்கள் நிகழாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி போன்ற வலிமையான தலைவர் ஆட்சியில் நீடிப்பது முக்கியம். நாட்டின் ஒவ்வாரு நகரத்திலும் இது போன்ற அப்தாப்கள் பிறப்பார்கள். நாட்டிற்கு சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை எங்களால் பாதுகாக்க முடியாது. அதனால் 2024ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்குவது மிகவும் முக்கியம்" இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்