ஆந்திரா: மனைவியிடம் வரதட்சணை கேட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டல் - சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

ஆந்திராவில் மனைவியிடம் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-25 05:47 GMT

ஆந்திரா:

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் குருகுல பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 28). இவர் முதிவேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி ஜாப்பர்ஸ் விஷ்ணு பிரியா (24). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு ஆண்டு வரை தம்பதியினர் மகிழ்ச்சியான குடும்பம் நடத்தினர்.

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் அவரது தந்தை தேவராஜ், தாயார் குருவ ராணி ஆகியோர் அதிக வரதட்சணை கேட்டு விஷ்ணுபிரியா-வை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ரூ 10 லட்சம் வரதட்சணைக் விஷ்ணு பிரியாவை அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து விஷ்ணுபிரியா நெற்றிப்பொட்டில் வைத்து வரதட்சணை வாங்கி வராவிட்டால் சுட்டு கொன்று விடுவதாக சுகுமார் மிரட்டினார்.

இதையடுத்து விஷ்ணுபிரியா மதன பள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். அங்குள்ள போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணா, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சுகுமார் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கி வராத மனைவியின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்