தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்ததால் தாளகொப்பா-பெங்களூரு ரெயில் 2 மணி நேரம் தாமதம்
தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்ததால் தாளகொப்பா-பெங்களூரு ரெயில் 2 மணி நேரம் தாமதமாக சென்றது.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக கெஞ்சனாலா பகுதியில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்துஅங்குள்ள தண்டவாளத்தில் விழுந்தது.
அந்த சமயத்தில் ரெயில் எதுவும் வராததாலும், தண்டவாளத்தில் யாரும் செல்லாததாலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவல்லை. மேலும், அந்த வழியாக செல்ல இருந்த தாளகொப்பா-பெங்களூரு ரெயில் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். இதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக தாளகொப்பா-பெங்களூரு ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.