மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு எங்கள் கட்சியை அழிக்க நினைக்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்காக வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை, 11 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகம் சென்று அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு எங்கள் கட்சியை அழிக்க நினைக்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஒருவேளை கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.