காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய பாஜக அரசின் மிகப்பெரிய சாதனை - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ ரத்து செய்தது மத்திய பாஜக அரசின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என ஜெய்சங்கர் கூறினார்.

Update: 2023-08-29 14:24 GMT

டெல்லி,

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ நீக்கியது கடந்த 10 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று. 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டபோது மந்திரி சபையில் நான் உறுப்பினராக இருந்தேன். இந்த சூழ்நிலையை நாங்கள் எப்படி இவ்வளவு காலம் சீர்குலையாமல் அனுமதித்தோம் என்று ஒரு பகுதி இன்னும் ஆச்சரியமாக உள்ளது.

மத்திய அரசு பணியில் நான் இணைந்தபோது 1979ம் ஆண்டு நான் காஷ்மீர் சென்றுள்ளேன். அதேபகுதிக்கு நான் 2019ம் ஆண்டு சென்றேன். ஆனால், மிகச்சிறிய அளவிலான மாற்றத்தை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். தற்போது, காஷ்மீரில் கள நிலமை மிகவும் நேர்மறையாக உள்ளது' என்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்