பிரபலமடைய ஆசைப்பட்டு காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பதுபோல ரீல்ஸ் போட்ட இளைஞர்கள் கைது
கேரளாவில், காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பதுபோல ரீல்ஸ் போட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.;
மலப்புரம்,
கேரளாவில், காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பதுபோல சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மலப்புரம் மாவட்டம் கருவாரக்குண்டு பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள், சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரீல்ஸ் தயாரித்து பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில், பிரபலமடைய ஆசைப்பட்ட அந்த இளைஞர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிராபிக்ஸுடன் புதிய ரீல்ஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில், சினிமா வசனங்களுடன் காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதுபோல கிராபிக்ஸ் காட்சிகளுடன் ரீல்ஸ் தயாரித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில், முகமது ரியாஸ், பாரீஸ், ஜாஸிம், சலீம் மற்றும் பவாஸ் ஆகிய 5 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.