சுதந்திர தினத்தன்று கடையின் முன்பு பாலஸ்தீன கொடியை ஏற்றியவர் கைது

மத்திய பிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று கடையின் முன்பு பாலஸ்தீன கொடியை ஏற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-08-16 16:11 GMT

போபால்,

இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து மக்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தைச் சேர்ந்த டெய்லர் ஹனீப் கான், தனது கடையில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களை குறிக்கும் வகையில் பலூன்களால் அலங்காரம் செய்திருந்தார். அதோடு தனது கடையின் முன்பு பாலஸ்தீன கொடியையும் அவர் ஏற்றி வைத்திருந்தார்.

இது குறித்து உள்ளூர் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேசிய கொடியை அவமதித்ததாக ஹனீப் கான் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்