குடிபோதையில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

உப்பள்ளி அருகே, குடிபோதையில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-07-26 14:48 GMT

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஓசூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன்(வயது 24). இவரது நண்பர் சிவராஜ்(25). நேற்று முன்தினம் 2 பேரும் தனது சக நண்பர்களுடன் ஓசூர் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு மதுகுடிக்க சென்றிருந்தனர்.

அப்போது குடிபோதையில் மல்லிகார்ஜூன் மற்றும் சிவராஜ் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவராஜ், பீர் பாட்டிலால் மல்லிகார்ஜூனின் தலையில் தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த மல்லிகார்ஜூன் கீழே சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்த மதுபான விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் மல்லிகார்ஜூனை மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சிவராஜை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்