செல்போன்கள் திருடிய 4 பேர் கைது

கோலார் தாலுகாவில் செல்போன்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5.58 லட்சம் மதிப்பிலான 31 செல்போன்களை போலீசார் மீட்டனர்.

Update: 2023-04-11 21:22 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் தாலுகாவில் செல்போன்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5.58 லட்சம் மதிப்பிலான 31 செல்போன்களை போலீசார் மீட்டனர்.

31 செல்போன்கள்

கோலார்(மாவட்டம்) தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள செல்போன் கடைகளில் விலை உயர்ந்த செல்போன்களை குறிவைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுபற்றிய புகார்கள் போலீஸ் நிலையங்களில் குவிந்தன. அதையடுத்து செல்போன் திருடர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணாவின் உத்தரவின்பேரில் செல்போன் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மாவட்ட சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே சைபர் கிரைம் போலீசார் செல்போன்கள் திருட்டு தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5.58 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 31 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

4 பேர் கைது

இதில் 10 செல்போன்கள் கோலார் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கடைகளில் திருட்டு போனதும், மீதமுள்ள செல்போன்கள் கோலார் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து திருடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மீட்கப்பட்ட ஒவ்வொரு செல்போனும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை கொண்டதாகும்.

கைதானவர்கள் கோலார் டவுனை சேரந்த ரமேஷ்(வயது 30), அலிம் பாஷா(32), சோமு(35) மற்றும் வெங்கடேஷ் (34) ஆகியோர் ஆவர். கைதான 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்