கணவரை கொன்ற பெண் உள்பட 7 பேர் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொன்ற பெண் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-07 21:24 GMT

கதக்:

கதக் மாவட்டம் லட்சுமேஷ்வர் தாலுகா சுவர்ணகிரி கிராமத்தை சேர்ந்தவர் சிவரப்பா(வயது 40). தொழிலாளி. இவரது மனைவி சிலவ்வா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிவரப்பா வெளி ஊர்களுக்கு சென்று தங்கி வேலை செய்வது வழக்கம். இந்த நிலையில் வீட்டில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிவரப்பா மாயமானார். பல நாட்களாக வீட்டிற்கு சிவரப்பா வராததால் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிவரப்பா குறித்து அவரது மனைவியிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் சிலவ்வா முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் லட்சுமேஷ்வர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஹாவேரி மாவட்டம் சிக்காம்வி தாலுகா அடவிசோமபுரா கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடப்பதாக தடாசா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அது மாயமானதாக தேடப்பட்டு வந்த சிவரப்பா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவரப்பாவை சிலவ்வா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து லட்சுமேஷ்வர் போலீசார் சிவரப்பாவை கொலை செய்ததாக அவரது மனைவி சிலவ்வா மற்றும் கள்ளக்காதலன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்