அமர்நாத் பக்தர்களுக்காக காட்டாற்று வெள்ளத்தை கடக்க ஒரே இரவில் புதிய பாலத்தை அமைத்த ராணுவ வீரர்கள்!

குறுகிய கால கட்டத்தில், இருள் சூழ்ந்த நேரத்தில் மிக நேர்த்தியாக பாலங்கள் சீரமைக்கப்பட்டது வியக்க வைத்துள்ளது.

Update: 2022-07-03 08:18 GMT

ஸ்ரீநகர்,

அமர்நாத் யாத்திரிகர்கள் செல்லும் பாதையில், நிலச்சரிவால் சேதமடைந்த பாலங்களை ராணுவ வீரர்கள் ஒரே இரவில் சீரமைத்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

அமர்நாத் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தின் 15 கார்ப்ஸ் என்று அழைக்கப்படும் 'சினார் வீரர்கள்' ராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக உள்ளது.

அமர்நாத் செல்லும் வழியில் பால்டால் அச்சில் பிரரிமார்க் அருகே அமைந்துள்ள பாலம் நிலச்சரிவு காரணமாக உடைந்தது. பால்டால் வழித்தடத்தில் காளிமாதாவிற்கு அருகில் உள்ள நாலாக்கள் வெப்பநிலை திடீரென அதிகரித்ததன் விளைவாக கலமாட்டாவில் உள்ள பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பொங்கி வரும் காட்டாற்று வெள்ளத்தை கடக்க, அந்த மரப்பாலங்கள் தான் வழி. ஆகவே பக்தர்களின் பயணம் தடைபடாமல் இருக்க, உடனடியாக சரிசெய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் சேதமடைந்த அந்த இரண்டு பாலங்கள் இந்திய ராணுவத்தால் ஒரே இரவில் சீரமைக்கப்பட்டது. சினார் கார்ப்ஸின் 13 பொறியாளர்கள் அடங்கிய குழு, ஒரே இரவில் முற்றிலும் புதிய பாலத்தை அமைத்துள்ளது.

மோசமான வானிலையை பொருட்படுத்தாமல், மிகக் குறுகிய கால கட்டத்தில், இருள் சூழ்ந்த நேரத்தில் மிக நேர்த்தியாக பாலங்கள் சீரமைக்கப்பட்டது வியக்க வைத்துள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்