காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி - துப்பாக்கிச்சூடு நடத்தி முறியடித்த ராணுவம்

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி நடைபெற்றுள்ளது.

Update: 2024-02-03 08:35 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையில் அமைந்துள்ள மண்ட்ஹர் கிராமத்தில் ராணுவத்தினர் இன்று அதிகாலை வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய சிலர் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குள் தப்பியோடிவிட்டனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நபர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்பதால் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்