ஜார்கண்டில் குண்டுவெடிப்பில் ஆயுதப்படை அதிகாரி காயம்
ஜார்கண்டில் குண்டுவெடிப்பில் ஆயுதப்படை அதிகாரி காயம் அடைந்தார்.;
சைபாசா,
ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அன்ஜன்பேடா கிராம வனப்பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தியபோது பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த நவீன வெடிகுண்டு ஒன்று, வெடித்து சிதறியது.
இதில் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயம் அடைந்தார். உடனடியாக அவர் ராஞ்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தவர், 197-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றிய இன்சார் அலி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் மேலும் சில வெடிகுண்டுகள் கைப்பற்றட்டதாகவும், அவை செயலிழக்க வைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல கோயில்கேரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம், 13 வயது சிறுவன் ஒருவன் நவீன வெடிபொருள் வெடித்ததில் படுகாயமடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.