முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் இன்றிரவு ஜப்பான் பயணம்

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான நோக்கில் அவருடைய இந்த பயணம் அமைகிறது.;

Update: 2023-12-10 15:27 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகிக்கும் அனில் சவுகான் இன்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு ஜப்பான் நாட்டுக்கு செல்கிறார். இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான நோக்கில் அவருடைய இந்த பயணம் அமைகிறது.

இந்த பயணத்தில், ஜப்பானின் மூத்த ராணுவ தலைவர்களை நேரில் சந்தித்து உரையாட திட்டமிட்டு உள்ளார். அந்நாட்டின் ராணுவ அமைப்புகள் மற்றும் நிறுவனங்களையும் அவர் நேரில் சென்று பார்வையிட உள்ளார்.

அவருடைய இந்த பயணத்தின்போது, ஜப்பானின் பாதுகாப்பு படையின் ஜெனரல் யோஷிடா யோஷிஹிடேவை சந்தித்து பேசுகிறார். பாதுகாப்பு படிப்புகளுக்கான தேசிய மையத்தின் துணை அதிபர் மற்றும் ஜப்பானின் மேஜர் ஜெனரலான அடாச்சி யோஷிகியையும் அவர் சந்தித்து பேச இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்