டீ குடிக்க சென்ற இடத்தில் தகராறு; கல்லூரி மாணவரை குத்தி கொன்ற 6 சிறுவர்கள்

மத்திய பிரதேசத்தில் நண்பர்களுடன் டீ குடிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் பொறியியல் கல்லூரி மாணவரை 6 சிறுவர்கள் குத்தி கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-01-02 14:47 GMT



இந்தூர்,


மத்திய பிரதேசத்தில் சிவபுரி பகுதியை சேர்ந்தவர் ஆயுஷ் குப்தா (வயது 21). பொறியியல் கல்லூரி மாணவரான அவர் தனது நண்பர்களுடன் டீ குடிக்க கடைக்கு சென்றுள்ளார்.

அவர் சென்ற வழியில் சிலர் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்துள்ளனர். இதனால், அந்த வாகன உரிமையாளர்களான மைனர் சிறுவர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதில், வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, மாணவரை அவர்கள் தாக்க தொடங்கியுள்ளனர். இதனால், அவர் தனது நண்பர்களுடன் பைக்கில் தப்பி சென்றுள்ளார்.

எனினும், ஆத்திரத்தில் அவரை விரட்டி சென்ற சிறுவர் கும்பல் கத்தியால் அவரது கழுத்து பகுதியில் குத்தி தாக்கி விட்டு தப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அந்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி பவார் குவான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்