நீ மட்டும்தான் ஆடுவியா... நானும் ஆடுவேன் பாரு; ஆச்சரியமடைய வைத்த யானை

சிறுமியின் நடன அசைவுகளுக்கு ஏற்ப தனது இரு காதுகளையும் உயர்த்தி, தலையை ஆட்டி அதேபோன்று செய்த யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2022-09-18 11:00 GMT


புதுடெல்லி,



வன விலங்குகளில் ஒன்றான உருவத்தில் பெரிய யானை பல ஆச்சரியங்களை தன்னுள் கொண்டது. இந்நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி திபான்ஷு காப்ரா இதுபற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், ஒரு சிறுமி யானையின் முன் நின்று கொண்டு நடன அசைவுகளை வெளிப்படுத்துகிறார். சற்று தொலைவில் நின்றிருந்த யானை சிறுமியின் பக்கம் திரும்பி பார்த்தது. பின்னர், அதனை உள்வாங்கி, அந்த நடனத்திற்கு ஏற்ப உற்சாகமுடன் தனது காதுகளை உயரே தூக்கி, தலையை ஆட்டியது.

எனினும், யானையின் பக்கத்தில் நின்றிருந்த நபர் இது எதுவும் அறியாமல், அதிர்ந்து போய் யானையை விட்டு சில அடி தூரம் தள்ளி சென்று நின்று கொண்டார்.

இந்த வீடியோவுக்கு தலைப்பாக, யார் நன்றாக ஆடியுள்ளனர்? என்ற கேள்வியையும் ஐ.பி.எஸ். அதிகாரி திபான்ஷு பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோவை 31.7 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் கண்டு ரசித்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். யானைக்கும், சிறுமிக்கும் இடையேயான அந்த இனிமையான தொடர்பை மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இதுபோன்ற இயற்கையின் அழகை படம்பிடித்து பகிர்ந்ததற்காக நன்றி என ஒருவரும், இரண்டு குழந்தைகளும் நன்றாக செய்தனர் என மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர். ஒரு மாணவி, தொடர்ந்து படித்து வந்ததில் போரடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால், இந்த வீடியோவை பார்த்த பின்பு புத்துணர்ச்சி பெற்றது போல் இருந்தது. இதற்காக நன்றி என தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்