அரக ஞானேந்திரா மனசாட்சியுடன் நடந்தால் போதும்

தற்கொலை செய்து கொள்ளவேண்டாம் என்று அரசு ஞானேந்திரா மனசாட்சியுடன் நடந்தால் போதும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-16 20:26 GMT

பெங்களூரு:-

மைசூருவை சேர்ந்த விபசார கும்பல் தலைவன் சான்ட்ரோ ரவி, பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டதுடன், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா மூலமாக போலீஸ் அதிகாரிகளிடம் பணம் பெற்று பணி இடமாற்றம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சான்ட்ரோ ரவியிடம் இருந்து அரக ஞானேந்திரா லஞ்சம் பெற்றதாகவும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறி இருந்தார். தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அரக ஞானேந்திரா கூறி இருந்தார். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவின் அலுவலகத்தில் அமர்ந்து சான்ட்ரோ ரவி பேசும் 2 புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 150 போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து பணி இடமாற்றத்திற்காக சான்ட்ரோ ரவி பணம் பெற்றிருக்கிறார். இந்த லஞ்ச பணம் யாருக்கு சென்றது. சான்ட்ரோ ரவிக்கும், அரக ஞானேந்திராவுக்கும் உள்ள தொடர்பு குறித்து கேட்டு இருந்தேன். இதற்காக அரக ஞானேந்திரா தற்கொலை செய்ய வேண்டாம். போலீஸ் பணி இடமாற்றம், லஞ்ச விவகாரத்தில் மனசாட்சி படி நடந்து கொண்டால் போதும். சட்டசபை தேர்தலுக்காக குடும்ப தலைவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம், 200 யூனிட் இலவச மின்சாரம் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. உழைக்கும் மக்களுக்கு தேவையான திட்டத்தை ஜனதாதளம் (எஸ்) கட்சி செயல்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்