நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் ...தமிழகத்தில் வேகமெடுக்கும் பணிகள்

கோவையிலும் முதல்நிலை வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

Update: 2023-07-04 22:35 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்கு பதிவு இயந்திர கிடங்கில், இயந்திரங்களுக்கான முதல் கட்ட பரிசோதனை செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்.

கரூரில், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான முதல் கட்ட பரிசோதனை செய்யும் பணியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்க்கும் பணியில், பெல் நிறுவன பொறியாளர்கள் முன்னிலையில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டில், ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.எம். மெஷின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சீல் உடைக்கப்பட்டு, பெங்களூரில் இருந்து வந்த பெல் பொறியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் கோவையிலும் முதல்நிலை வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்