காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக குலோத்துங்கன் நியமனம் - புதுச்சேரி தலைமை செயலாளர் உத்தரவு
காரைக்கால் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக குலோத்துங்கன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
புதுச்சேரி,
காரைக்கால் ஆட்சியராக இருந்த முகமது மன்சூர், புதுச்சேரி வணிகத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக குலோத்துங்கன் நியமனம் செய்யப்படுவதாக புதுச்சேரி தலைமைச்செயலர் உத்தரவிட்டு உள்ளார்.
அதேபோல, காரைக்கால் மாவட்ட வருவாய் துணை ஆட்சியர் ஆதர்ஷ் மாற்றலாகி சென்ற நிலையில் புதிய மாவட்ட துணை ஆட்சியராக ஜான்சன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.