ஆந்திர மாநில கவர்னராக நீதிபதி அப்துல் நசீர் நியமனம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு
ஆந்திர மாநில கவர்னராக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
ஆந்திர மாநில கவர்னராக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ராமர் கோவில், முத்தலாக், பண மதிப்பிழப்பு போன்ற முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு அளித்தவர். அவரது நியமனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, ''ஓய்வுக்கு பின்பு பதவிகள் அளிப்பதால், ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளில் தாக்கம் ஏற்படும்'' என்று மறைந்த பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி பலதடவை கூறியுள்ளார். அதன்படி, இந்த நியமனத்தை நாங்கள் எதிர்க்கிறோம். கண்டனம் தெரிவிக்கிறோம். இது, நீதித்துறை சுதந்திரத்துக்கு பெரும் அச்சுறுத்தல்'' என்று தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. ஏ.ஏ.ரகீம் கூறும்போது, ''நீதிபதியாக ஓய்வு பெற்ற 6 வாரங்களுக்குள் அப்துல் நசீர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மோடி அரசின் இதுபோன்ற முடிவுகள், ஜனநாயகம் மீது படிந்த கறை'' என்று குறிப்பிட்டார்.