2023 பத்ம விருதுக்கான விண்ணப்பம் நாளையுடன் முடிவு
குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கான விண்ணப்பம் நாளையுடன் முடிவடைகிறது.;
புதுடெல்லி:
குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி (நாளை) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகளுக்கு https://awards.gov.in என்ற முகவரியில் உள்ள தேசிய விருதுகளுக்கான இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த விருதுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் விருதுகள் மற்றும் பதக்கங்கள் பகுதியிலும், பத்ம விருதுகளுக்கான இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
இந்த விருதுகளுக்கான சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்து https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.