மூலை முடுக்கெல்லாம் மக்கள் மத்தியில் மன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது- ராஜஸ்தானில் அமித்ஷா பேட்டி

கடந்த 6 மாதங்களாக நான் ராஜஸ்தானுக்கு வந்து செல்கிறேன். இந்த மாநிலத்தில் அடுத்து பாஜக ஆட்சியமைக்கும் என்பதை நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன் என்று அமித்ஷா கூறினார்.

Update: 2023-11-23 10:34 GMT

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதனால், காங்கிரஸ் - பாஜக கட்சிகளின் மூத்த தலைவர்கள் ராஜஸ்தானில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், ராஜஸ்தானில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: - கடந்த 6 மாதங்களாக நான் ராஜஸ்தானுக்கு வந்து செல்கிறேன். இந்த மாநிலத்தில் அடுத்து பாஜக ஆட்சியமைக்கும் என்பதை நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன். மூலை முடுக்கெல்லாம் மக்கள் மத்தியில் மன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துவரும் காங்கிரஸ் அரசுக்கு ராஜஸ்தான் மக்கள் பிரியாவிடை அளிக்கும் எண்ணத்தில் உள்ளனர்.

ரெட் டைரி காங்கிரஸ் கட்சியின் ஊழலின் அடையாளமாக மாறிவிட்டது. இந்திய வரலாற்றில் இது மாதிரியான விசியங்கள் இதுவரை நடந்ததே இல்லை. அமைச்சர் அலமாரியில் ரூ.2.35 கோடி ரொக்கம் மற்றும் 1 கிலோ தங்கம் சிக்கியது. ஆனால் முதல்வர் அசோக் கெலாட்டிடம் இருந்து எந்தவித எதிர்வினையும் வரவில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்